Monday, April 19, 2010

கவிதை என்று சொல்லிக்கொண்டு...... மேகம் : 1

தூக்கியெறியப்பட்ட கனவுகள்,
சிதைந்து போன உணர்வுகள்,
வர்ணமிழந்த கவிதைகள்,
மீள முடியா என் வலிகள்
என தனிமையாக்கப்பட்ட நினைவுகள் வழியே
நடைபிணமாய் செல்கிறது
உன்னைச் சேரா என் காதல்.......!!!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

என்னைக் கொல்லத் துடிக்கும்
உன் கண்களுக்கு எப்படி புரிய வைப்பேன்,
நீ தான் என் உயிர் என்று..............!!!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நீ மகிழ்வாய் என
பூங்கொத்துக்களுடன்
சாலை வளைவில் காத்திருக்கின்றேன்,
சற்றே விருப்பமின்றி
மலர்களில்லாத சோலைகளை பரிசளித்தாய்.
கண்டால் மகிழ்வாய் என
விண்மீன்களை இழுத்துவந்தேன்
சீரிய மௌனத்தோடு
வண்ணங்களற்ற மேகங்களை விட்டுச் சென்றாய்
சிவந்தது
என்
நிலவில்லாத வானம்....

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தூது அனுப்பி காத்திருக்கிறாய்....
என்னிடம் கொடுத்த
உன் புகைப்படத்தைக் கேட்டு..
நிச்சயமாய் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்
நீ இல்லா உலகில்
உயிர் வாழக் கற்றுக்கொண்டேன் பெண்ணே,
உன் நிழல் எதுக்கு ?!!!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

குழந்தைகளில்லா வீடு,
பொம்மையில்லாத குழந்தை,
நட்பில்லாத தனிமை,
கனவுகளற்ற காதல்,
நினைவுகள் மறந்த உறவுகள்
குளிர் மொய்க்கும் ஆடையில்லா இரவு
மௌனங்களுக்கு பின் பிரிவு
காதலுடன் தொடரும் ஏமாற்றம்
கூட்டத்தில் தொலைந்த சிறுவன்
சிறகிழந்த பறவை
நிலவில்லாத வானம்
அனைத்திலும் கொடுமை,
நீயில்லாத ' நான் ' !!!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அடிக்கடி என் கனவில் வருகிறாய்,
தவறிவிட்டுப்போன உன் நினைவுகளை
மீட்டெடுக்கவா ??
மீதமுள்ள என் உயிர் வேண்டியா ??
வாழ்க்கை தேடும் என் வலிகளை காணவா ??
சிதைக்கப்பட்ட என் இதயம் தேடியா ??
வலுவிழந்த என் நம்பிக்கைகளை
சோதிக்கவா ???
உன்னைக் காணத் துடிக்கும்
கண்களுக்கு களைப்பேற்றவா ??
உன்னையின்றி குற்றுயிராய் இருக்கும்
இதயத்தை தொட்டு செல்,
உயிர் விழுங்க நினைக்காதே......
என் வலிகளும்,
வார்த்தைகளும்
உனக்கானவை................!!!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மிட்டாய் கேட்டு ஏமாற்றப்பட்ட
குழந்தையின்,
ஏங்கிய
விழிகளுடனே பயணிக்கின்றேன்
நீ கொண்டு சென்ற
என் காதலைத் தேடி......

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தொலைபேசித் துறையே
வியக்கும் அளவுக்கு
உன்னுடன்
நேரத்தை செலவழித்திருக்கிறேன்.
மணிக்கொருமுறை
குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறேன்
அன்றெல்லாம் வராத
அவ் வார்த்தைகளை
இன்றெப்படி
ஒற்றை வரி கடிதத்தில்
சுருக்கி, குறிப்பிட்டு எழுதினாய் ??
' நீ காத்திருப்பது வீண் ' என்று ....

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

என்னவள்
தூது அனுப்பியிருக்கிறாள்
என்னிடம் விட்டுச்சென்ற
அவள் புகைப்படத்தைக் கேட்டு.......
நிச்சயமாய் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்
' அவள் புகைப்படமேல்லாம் எனக்கு வேண்டாம்
அதிலெல்லாம் கண்டிப்பாக அவள் இருக்க முடியாது......

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

காதல் தோல்வி நிரந்தரமில்லை,
ஏங்கித் துடிக்க நேரமில்லை,
பிழை நூறு செய்தாலும்,
என் இதயம்
நீ கொல்ல வேண்டி காத்திருக்கும்,
எத்தனை முறை தோற்றாலும்
விழி உன்னை தேடியே
என்னைக் கொண்டு செல்லும்.
நொடிக்கொருமுறை நான் இறந்தாலும்,
உன் நினைவுகள்
எனக்கு உயிர்க்கொடுக்கும்,
உனக்கான காதல் என்னுடன்
உயிர்த்தெழும்,
நீ விட்டுச்சென்ற சுவடுகளில்,
என் உயிர் துளிர்க்கும்,
உன் வார்த்தைகள்
என் காயம் ஆற்றும் என
அற்புதம் நிகழ்த்தும்
ஜீவ நீரூற்று
என் காதல்.............!!!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உயிரை சாய்த்துவிட்டுப் போனாய்,
இரு விரல்களுக்கிடையே ,
அங்குலம் அங்குலமாய் கரைகின்றது
என் ஆறடி......
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

விழித் தேடும் வேளையில்,
மின்னலாய் வருகிறாய் ,
தேடியலைகிறேன்
என் காதலின் தடங்களை......
நீ விட்டுச்சென்ற மீதி உயிர்
கரைந்தோடுகின்றது,
நொடிகளை விட அசுர வேகமாய்....!!!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

காதல் வேண்டாம் பெண்ணே.....
உன் உடைக்க முடியா பதிலில்
தோற்றுப்போய்,
இது நட்பு என்றே
ஒத்துக்கொள்கிறேன்.
மீண்டும் வா !!!
நொறுங்கிபோன என் கனவுகளையும்,
மீதமிருந்தால்,
இதயத்தையும்
ஒட்டிப்பார்த்து
உயிர்க்கொடுக்க
முயற்சி செய்யலாம் ...........,


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அவள் வரப்போவதில்லை,
இறுதிவரை வரப்போவதில்லை...................
என்று இதயம் நொடிக்கொருமுறை
நியாபகப்படுத்தியும்,
அவள் வராத வழியை நோக்கியே
காத்திருக்கின்றன,
தூக்கமிழந்த
என் ஈர விழிகள்.....

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நான் ஏன் இப்படி ??....
எதற்காக காதல் வலிகளைப் பற்றியே
கவிதை எழுதிக்கொண்டிருக்கின்றேன் ??
அவள் வருவதற்கு முன்பிருந்தே
இவ்வுலகை ரசித்தேனே ???
பிறகேன் இப்படி ??...
என் உலகம் இருட்டாக்கப்பட்டாலும்,
அவள் நினைவுகள் என்னை கவிதை எழுத தூண்டுகின்றனவா ???
உனக்கு மாற்றம் வேண்டும்....
அவள் கொடுத்து விட்டுப்போன வலிகளை
மறக்கத் துவங்கு....
தொலைத்துவிட்ட வழியைத் தேடு ....
ஆயிரமாயிரம் உறுதிகள் எனக்கு நானே
கூறிக் கொண்டே
தனிமையில்
தோட்டங்களில் உலவிச்சென்றேன்,
அவள் நினைவுகள் தூரமாயின.
சில பூக்களும் என்னை வாழ்த்த விழைந்தன
தற்செயலாய் அவர்களை கடந்தபோது கவனித்தேன்,
என் வலிகளை உணர்த்த ,
கைகள் எங்கும் முட்களை ஏந்திக்கொண்டிருந்தனர்,
அவள் நினைவுகளை விட்டுப் பயணிக்க முயன்ற
என்னைப் பற்றி,
ஏளனமாய், ஒன்றோடொன்று முகம் உரசி,
ரகசியம் பேசிக்கொண்டிருந்தன,
எனக்காக அவள்,
என்றோ பரிசளித்த ரோஜாச் செடிகள் ...........

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நான் கவிஞனா பெண்ணே ???
உன் மனசாட்சியை தொட்டு
உண்மையைச் சொல்....................
உன்னிடம் வார்த்தைகளை தேடித் தேடி
பொறுக்கி பேசிய எனக்கு,
வெற்றுக்காகிதத்தில்
வார்த்தைகளை கோர்க்க கற்றுக் கொடுத்தது யார் ???
கவிதைகள் உனக்கு புரியாதென்கிறாய்.....
என் காதல் கண்டு
மொழித் தெரியா
வேற்றுகிரகவாசிக் கூட காதலித்துவிடுவாள்.
வெற்றுக் கனவுகளுடன்
உனக்காக நான் காத்திருக்கும்
ஓடாத நிமிடங்களில்.......................

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஆதரவின்றி என் வார்த்தைகள்,
இரக்கமுள்ள எவரேனும்
ஆளுக்கொன்றாக
தத்தெடுத்து செல்லுங்கள்
என் கவிதைகளை.
இப்பரதேசி இறந்த பின்
அவற்றை அனாதையாக்கிவிடாதீர்கள்.......
தாயுமற்று, தந்தையுமற்று
அவைகளை
எம் மக்கள் போல்
தாயகம் தேட விடாதீர்கள்......
வாழ்வின் வலிகள் அவை,
என்னவள் பற்றிய இறுதிக் குறிப்புகள் அவை
சரியாகச் சொல்லவேண்டுமானால்,
குற்றுயிராக்கப்பட்ட ஓர் இதயத்தின் புலம்பல்.
என் தாடிக்குள்ளும் ஓர்
கவிஞன் உண்டென
ஊர் சொல்லிக் கேட்டிருக்கின்றேன்.
அவனை எங்கேனும்
கண்டால்,
நீங்கள் விரும்பாத
என் பாரமான வார்த்தைகளை
அவனிடம் கொடுத்து விடுங்கள்.
விரும்பி வாங்கிக் கொள்வான்,
ஒன்றுக்கும் உதவா
அவ் உயிர்மெய்யெழுத்துக்களின்
குவியலை.
தட்டில் ஏதேனும் போட்டு
உயிர்ப்பியுங்கள் அவன் நாடிகளை,
இல்லை..... சாகட்டும் விடுங்கள்
மரணம் ஒன்றும்
அந்த இதயம் செத்தவனுக்கு புதிதல்ல
நிசப்த இரவில்,
மௌனித்த வார்த்தைகளுடன்,
நீங்கள் கொடுத்ததை
கொண்டுபோய் சேர்த்துவிடுவான்,
என்னவள் வசிக்கும் நிலவுக்கு ...............................!!!
                                                                - ஜெய் <3