உணர்வுகளின் பதிவுகள்

காணற்கரிய ' அகமகிழ்ந்த ' மடல்கள்...........

--------------------------------------------------------------------------------
ஜெனித்தா அக்கா :

முதல் காதல் நம்மை முற்றும் திறக்க வைக்கிறது,.....

பூ செடியை நட்டு விட்டு பார்த்து பார்த்து தண்ணீர் ஊத்தி ஆசைஆக வளர்த்து விட்டு.... பூ மலர்ந்தவுடன் அதை செடியுடன் சில மணத்தியாலம் கூட உறவாட விடாமல் பறித்து சூடி விடுகிறோமோ அப்பொழுது அந்த செடியின் வேதனை நம்மக்கு புரியுமா தோழா????
செடிக்கு வாய் இல்லை என்பதால் அதற்க்கு உணர்வு இல்லை என்று நாம் நினைக்கிறோம்..... இது சரியா????
...
மனிதனும் சில நேரங்களில் உணர்வு அற்ற செடியாகி விடுகிறோம்.............. உச்சரிக்கும் பெயரை வைத்தே காதலுக்கு அர்த்தம் உண்டு ..... அவளை பிரிந்த நீ அதிஸ்டசாலியா..... உன்னை பிரிந்த அவள் அதிஸ்டசாலியா காலம் சொல்லும் பதில்.......காதலை யாசி ....உயிரை சுவாசி...... உன்னை முத்தம் இட உனக்காக இறைக்க கொண்ட ஒரு வனாத்து பூச்சி வரும்....

உன்னை நீ அறிய மறந்தாய் ...... உன்னை அறிய அவள் மறந்தால்... உன்னையும் அவளையும் காதல் அறியும்......

காதல் ஜெயித்து விட்டும் ..... கவிதைகள் தோற்று விட்டும்..
கவிதை ஜெயித்து விட்டும்.... காதல் தோற்று விட்டும்...
இங்கே ஜெயித்தது கவிதை......


தோழர் செல்வக்குமார் அண்ணாமலை :

Intha padaippu karpaniaya alla
anabavuvama endru enakku theriyathu,
anal ungal kavithai(allthu kadhalil) iruntha unmai
antha eedupadu ,athil neengal kattiya urukkam,
varthai uccharippu , eekkam, thunbam, melum melum
intha kavithaikkum ungal unmai kahalukkum pukazharam sootta enakku therintha tamizhil varthaikal illai thozhare ,

ungaludiaya ovvoru varilyayum nan padikkum pozhudum ullukkul eerpatta unarvu varthaikalal ucharikka iyalathu,

ivainathin vilaivu en kankalil siru thuli neer ,
vazhka ungal kavithai vazhtthullal....

kurippu:unglalai azhaku tamizh varthaikalil vazhtha viruppam aanal enakku kanipporiyil ezhutha theriyathu, mannikkavum

( இந்த படைப்பு கற்பனையா அல்ல அனுபவமா ? என்று எனக்கு தெரியாது,
ஆனால் உங்கள் கவிதை ( அல்லது காதலில் ) இருந்த உண்மை அந்த ஈடுபாடு, அதில் நீங்கள் காட்டிய உருக்கம், வார்த்தை உச்சரிப்பு, ஏக்கம் (!), துன்பம், மேலும் மேலும் இந்த கவிதைக்கும் உங்கள் உண்மை காதலுக்கும் புகழாரம் சூட்ட எனக்கு தெரிந்த தமிழில் வார்த்தைகளே இல்லை தோழரே....

உங்களுடைய ஒவ்வொரு வரியையும் நான் படிக்கும் போதும் உள்ளுக்குள்ஏற்பட்ட உணர்வுகளை , வார்த்தைகளால் உச்சரிக்க இயலாது...

இவையனைத்தின் விளைவு , என் கண்களில் சிறு துளி நீர் ,
வாழ்க உங்கள் கவிதை ... வாழ்த்துக்கள் .....!!!

குறிப்பு : உங்களை அழகு தமிழ் வார்த்தைகளில் வாழ்த்த விருப்பம் . ஆனால், எனக்கு கணிப்பொறியில் எழுத தெரியாது . மன்னிக்கவும் )


அமுதா வீர தமிழ் அக்கா :

அன்பு அனைத்தும் ஆக்கும்..!!
சகோதரிகள் உண்டு..
எல்லாம் சரியாவும்..
கவலை வேண்டாம் தம்பி..!!

அண்ணன் சே.பாக்கியராசன் :

தம்பி வாழ்த்துக்கள்.. எழுத்து உன் வசபடுகிறது.. வார்த்தைகளை லாவகமாக கோர்க்கும் கலை உன் கைவருகிறது.. கவிதைகள் படித்து மகிழ்ந்தேன்... தொடர்ச்சியாக எழுது... அண்ணனின் வாழ்த்துக்கள்...

காதல் தவறில்லை, காதலிப்பது தவறில்லை, கவிதை எழுதுவதும் தவறில்லை... எழுது நிறைய எழுது ஆனால் இதை மட்டுமே எழுதி மனமகிழ்ச்சி பெற்று இருந்துவிடாதே.. தம்பி இதை எழுத ஊரில் ஆயிரம் பேர் இருக்கான் வெட்டியா... தெருக்கு பத்து பேர் காதல் கவிதைகள் எழுதி புத்தகம் போடறான்.. நீ இத்தனை அருமையாக எழுதுவாய் என்று உன் காதல் கவிதைகள் மூலமாக தான் தெரிந்துகொண்டேன் என்பதில் எனக்கு சற்று வருத்தம்... உன் எழுத்தை மற்றவர்கள் பாராட்டுகிறார்கள் எனக்கு மகிழ்ச்சி தான் ஆனால் நமக்கு இது வேலை இல்லடா தம்பி... நம் மக்களின் நிலைமையும், வாழ்கையும், கஷ்டங்களும் உனக்கு தெரியாததா... அதை வார்த்தைகளால் வடித்து தீர்க்க முடியாதே டா தம்பி.. யாரும் சரிவர எழுதாத நம் மக்களின் வாழ்கையை அல்லவே நீ எழுத வேண்டும்... அவர்கள் கோவத்தை, சோகத்தை, வீரத்தை, சுதந்திரத்தை, ஒடுக்குமுறையை, தியாகத்தை, வன்கொடுமையை, இழந்துவிட்ட தாய்மண்ணை, அழிந்து கொண்டிருக்கும் தாய் மொழியை, சிதைக்கப்படும் பண்பாட்டை பற்றி தெரிந்த நீ எழுதாமல் யார் எழுதுவது... அதை எழுது பிறகு இதை எழுதி கொள்ளலாம்...

மற்றபடி நீ நன்றாக எழுதுகிறாய் என்ற பெரு மகிழ்வுடன் - பாக்யா......

ஜெயக்குமார் தமிழ்மணி அண்ணா :

புகைப்படமும்.. படைப்பும் .. மிக அழகாக பொருந்தி..... நெஞ்சை வருடுகிறது... தோழர்

காலம் உன் காயத்தை ஆற்றிவிடும்...... யாரும் யாருக்காகவும் காத்திருக்க மாட்டார்கள்.......
இழப்பு உனக்கில்லை.

-------------------------------------------------------------------------------------

- அவளை இழந்த எனக்கு ,
கூறப்படும் ஆறுதல்கள் கூட
அழகாய்த்தான் இருக்கின்றன,
என்னவள் போல !