Monday, March 8, 2010

தழுவல்.......

* என்னைக் காணும்போதெல்லாம் தலைக்குனிவாய்,
நாணம் என்று நினைத்தேன்......
இப்பொழுதான் புரிந்தது,
காதல் இல்லா உன் கண்களை
மறைக்க முயன்றாய் என்று.....

* நூறு கோடி நீர்க்குமிழிகளுடன் நான்,
ஒரே ஒரு ஊசியுடன் நீ.....!!!

* தூக்கத்தில் மூழ்கிய பின்பும்
கனவுகள் இல்லை
திறந்திருக்கும் விழிகளில்
ஆயிரம் கனவுகள்......!!!

* உறங்க மறுக்கிறேன்
இமைகளுக்கிடையே நீ....

Sunday, March 7, 2010

புகைக்குள் புதையும் .....

அன்று அவளைக் கைப்பிடிப்பதற்காக
என்னைக் கைவிட்டாய்,
இன்று அவள் உன்னைக் கைவிட்டபின்பும்,
உன் விரல்களைத் தாங்கிப் பிடிப்பது
நான்தான்.........

நிச்சயம் ஒரு நாள்
நீ பதில் சொல்லியே ஆக வேண்டும்,
உன்னுள் இருக்கும்
ஆறாத் தீயினால்
என்னை நீ பொசுக்குவதற்கு ....

உருப்படுவதாய் எண்ணமே இல்லையா?
தினமும் நடுஇரவில் வந்து
புகைப்பிடிக்கிறாய்...
தேரடி வீதியில் கடை வைத்திருக்கும்
அண்ணாச்சி கேட்டார்.......
அவருக்கென்ன தெரியும்,

என்னைச் சந்தித்த வேளைகளில்,
அது நீ கடந்து சென்ற பாதை என்று !!!

' புகைப்பிடிக்கிறாயாமே ?? '
எல்லாரும் சந்தேகப்படுகிறார்கள்,
உடனே நிறுத்து
தினம் தினம் கடல் தாண்டி
தொடர்பு கொள்ளும்...
என் மாமனுக்கு
எப்படி சொல்வேன்.......
' புகைப்பிடிக்க கற்றுத் தா ,
பிறகு நிறுத்துகிறேன் ' என்று....!!


புகைப்பிடிக்கும் சாக்கில்
அதிகாலையில் கடைக்கு வந்தாலும்,
நீ வரும் பாதையில்
நண்பர்களுக்கு தெரியாமல்
பதுங்கியே விதைக்கிறேன்
உனக்கான கவிதைகளை,
ஒரு நாளேனும் அவற்றுக்கு உயிர்கொடுப்பாய்
என்ற கனவுகளுடன்.....

உன்னைப் பிரிந்ததும்,
நான் புகைப்பிடிக்க தொடங்கியதை
கண்டுகொள்ளாமல் இருந்தாய்.....
ஒரு நாள் தெரியும் உனக்கு,
இவன் தினம் தினம்
இறக்கவே முயற்சி செய்தான் என்று......

இனிதே நடந்தது..... கருணைக் கொலை


மெல்லிதாய் திட்டியதற்கே நூறு முறை மன்னிப்புக்கேட்டாய்.....
பின்னாளில் இப்படி ஒரு ' பெரும் ' செயலை செய்யப்போகிறோம் என்று முன்னரே திட்டமிட்டாயா ??

வணக்கம், 
சற்றுநேரம் பொறுத்திருங்கள், 
என்னவள் வந்திருக்கிறாள்
 மீதமிருக்கும் உயிரை 
விலைக் கேட்டு போவதற்கு........

உனக்கு இதயம் இல்லை என்று
என்னுடையதையும் பறித்துக்கொண்டாய்
யாரிடமும் சொல்லவில்லை நான்,
என் இதயம் உன் வசம் இருந்தும்
உன்னை ஏன்
எல்லாரும் கூறுகிறார்கள்
நீ ' இதயமற்றவள் ' என்று......


என்னவள் செய்தி அனுப்பினாள் 
வார்த்தைக்கு வார்த்தை கேள்வி கேட்டது இதயம், 
சற்று நேரம் இதய துடிப்புகளை நிறுத்திக்கொள்ளட்டுமா ???

எத்தனையோ கூலிப்படைகள் நிகழ்த்த முடியாத காரியத்தை
 செவ்வனே செய்து முடித்தது, 
என் கதையைக் கேட்டு நீ விட்டுச்சென்ற இதழோர சிரிப்பு....!!!

எதற்கும் உன் தந்தையிடம்
கேட்டுப்பார்,
அவர் தான் ஊரிலேயே சிறந்த இதய மருத்துவராமே,
எப்படி நீ இதயமின்றி பிறந்தாய் என்று !!!

' என் email id ஐ delete பண்ணிடு ' ,
'  Mails எல்லாத்தையும் trash bin ல போட்டுவிடு ' , 
' தயவு செய்து இனி friendship Request அனுப்பாதே '
' CHAT ல இருந்து என்னை Ignore பண்ணிடு...............' 
- நீ போட்ட உத்தரவுகளை எல்லாம் சத்தமே இல்லாமல் ரசித்துக் கொண்டிருந்தது,
 நீ என்னை விட்டுப் பிரிய போகிறாய் என்பதைக் கூட கணிக்க முடியாத 
என் அப்பாவி மனது.........