Saturday, March 6, 2010

பிரிவிலும் .........

என்றாவது உன் பாதம் படும் இடங்களை கவனித்திருக்கிறாயா ??
எறும்புகளும் மோட்சம் வேண்டிக் காத்திருக்கும்......

தினம் தினம் காத்திருக்கின்றேன்,
உயிர் உறைவதற்குள்
யாரேனும் ஆறுதலுக்காவது சொல்லிவிட்டுப் போங்கள்,
' உனக்காக அவள் காத்திருக்கின்றாள் ' என்று .....


என் கவிதைகளுக்கே உன்னைக் கண்டால் அச்சம்.
எனக்கே புரியவில்லை, அவை ஏன் தன் தாயகம் செல்ல மறுக்கின்றன என்று !!!

இறுதிக் கவிதை......

கவிதைகளுக்கு உயிர் கொடுக்கும்,
உண்மைக் காதலுக்கு உணர்வளிக்கும்,
ஜெனித்தா அக்கா,

என்றும் குறும்புடன் எனக்கு ஆறுதலாய் விளங்கும்
புன்னகை பூ,...
வீர அமுதா அக்கா,

சத்தமில்லா போராளியாக,
முயற்சிகளுக்கு குரல் கொடுக்கும்
இலாவண்யா அக்கா,

புலியின் கனவுகளுக்கு வர்ணம் தீட்டி
என்றும் எனக்கு துணை நிற்கும்
மீரா அண்ணி............

- இவர்கள் என்னுடன் இருக்கும்போதும்,
மனதின் ஓரத்தில் லேசாய் வலிக்கிறது உன் நினைவுகள் ,
' எங்கே போனது உனது காணற்கரிய பெண்மை ???

கடற்கரை முதல் கல்லறை வரை......



* எவ்வளவு கண்டித்தும்,
அவள் தடம் பதித்த சுவடுகளை நோக்கியே செல்கின்றன,
விபரம் அறியா என் கால்களும்,
வலியால் கலங்கிய என் விழிகளும்....


* சிக்கல்கள் ஆயிரம் இருந்தும்,
நீ நலம் விசாரிக்கும் போதெல்லாம்,
பதில் மாற்றி சொல்ல மறுக்கின்றது மனம்
" நான் ரொம்ப நல்லா இருக்கேன் , நீங்க ? ".......

* நீ எத்தனை முறை மறுத்தாலும்
பொம்மையை எடுக்க ஒடும் குழந்தையைப் போல
உன்னை நோக்கியே பயணிக்கின்றது என் மனம்.

* உன் கண்ணில்படும் என் ஞாபகங்களையெல்லாம்
நீ அழித்துவிட்டாலும்,
இன்றும் நம் கதையைச் சொல்லி சிரிக்கின்றன FACEBOOK ம் , ORKUT ம் ........

* நீ பிரிந்து சென்ற பிறகும் மிச்சமிருக்கும்,
என் உயிரை கொய்து விட்டுப்போ,
உனக்காக இறப்பதை விட,
உன் காதலோடு இருப்பது வலிக்கிறது.....

* 4 மாத சம்பளம் ?
தூரத்து மாமாவிடம் குடுத்த கடன் ?
தவணை கட்ட பணம் ?
வீட்டுக்கு செலுத்த வேண்டிய வாடகை ?
எனக்கான கேள்விகள் ஆயிரம் இருந்தும்....
உன் வார்த்தை வேண்டி,
சற்றே மெலிதாய் கேட்கின்றேன்,
" ஜிம்மி இப்ப எப்படி இருக்கு ? "

* இன்று ,
என் அறையில்,
என்னுடைய இதய தேவதை
தங்கையுடன்....
பேச தொடங்கும்போதே ......
குரல் நடுங்க தொடங்கிவிடுகிறது,
என் அப்பாவின் திட்டுக்காக,
" படிக்கிற பசங்க இருக்குற இடத்துல உனக்கு என்ன வேலை ?? "...


* ' என்ன இன்னிக்கும் வேலைக்கு போகலையா ? ' அம்மாவின் கேள்வி,
' உயிரைத் தொலைத்தேன்.......' இடைவிடாத செல்போன் அழைப்பு
' சீக்கிரம் எழுந்திரு மணி ஆச்சு ' தங்கையின் கெஞ்சல்
இத்தனை குரல்களுக்கு மத்தியிலும் உயிரற்று போய் இருக்கின்றேன்...
அவள் நினைவுகளில் ................

* எப்போதும் மகிழ்ச்சியாய் இரு என்று
அடிக்கடி சொல்லுவாய்,
இப்போதுதான் புரிகின்றது,
காலமெல்லாம் கண்ணீர்விட
என்னைத் தயார் படுத்தினாய் என்று......

இவன் ......
வேறு யார்..... உன்(னா)னில் தொலைந்துபோனவன்

உண்மைத்தடம் அறிய ' சொடுக்குக ' : http://www.facebook.com