Sunday, July 11, 2010

நிலாச்சாரல்.... மேகம் : 1


அவள் தோளில் அமர்ந்து விட்ட மகிழ்ச்சியில்,
இன்னும் உயரே பறக்கத் துவங்கியது,
சிட்டுக்குருவி !!!



அவளை விட்டு பிரிந்துவிடப்போகிறோம் என்ற பயத்தினால்,
வேக வேகமாய் அவளைப் பின் தொடர்கிறது,
என்னவளின் நிழல் ..............!!!



கனவிலும் நான் நினைக்கவில்லை,
இவ்வளவு எளிதாக என் இதயத்தை
நீ கொண்டுசெல்வாய் என்று !!!



நாளை உன்னைக் காணப்போகும்
மகிழ்ச்சியில்,
இரவெல்லாம் இமை மூட மறந்தன
என் விழிகள் !!!



என் பொய்களில் மறைந்திருக்கும்
உண்மையை கூட
எப்படியோ
கண்டுபிடித்துவிடுகிறது
உன் காதல்....................!!!



யாரும் அருகிலில்லாத
மலையுச்சியின்
...தனிமை இரவில்,
எனக்கான உன் காதலை
இமைக்க மறந்து
இரசித்துக்கொண்டிருந்தோம்,
நானும், நிலாவும் !!! ........



என்னுடன் பேசி முடித்து
நீ கிளம்பும்போதெல்லாம்,
என் அனுமதியின்றி
உன்னுடன் செல்ல துடிக்கும்,
...என் இதயம் .



 உன்னுடன் பேசி முடித்து,
விடைபெற மனமில்லாமல்,
முடிவற்று நீள்கிறது
சாலைகளும், வார்த்தைகளும்...........



எனக்காக நீ காத்திருக்கும்
ஒவ்வொரு பொழுதிலும்,
உன்னையறியாமல்
துளிர் விட்டுக்கொண்டிருக்கிறது,
எனக்கான காதல்...........!!!


என் பெயர் சொல்லி
நீ அழைக்கும்போதெல்லாம்
எட்டி பார்க்கும்
என் இதயம்........





ஏதோ ஒன்று இருப்பதாக நினைத்துக்கொண்டு,
கைகளால் சைகைகள் காட்டி
என்னிடம் பேசிக்கொண்டிருந்தாய்.
நீ சென்ற பின்னும்,
காற்றில் தெரிந்தது,
...தூரிகை இல்லாமல்
நீ வரைந்த ஓவியங்கள் ....!!!



தூங்கும்போது என்ன கனவு காண்பாய் ?
தினம் நான் கேட்கும்போதெல்லாம்
மௌனித்து சென்றுவிடுகிறாய்,
ஓர் இனிய இரவில்,
நீ சொன்ன பின்பு தான் கண்டுக்கொண்டேன்,
...தேவதைகள் கனவுகள் காண்பதில்லை என்று....



விடியாத பொழுதுகளிலும்
வெளிச்சம் பூசிக்கொள்கின்றன
அவள் தேகம் தொட்டுசென்ற
வண்ணத்துப் பூச்சிகள்...



உன்னைத் தேடி நான் அலைந்ததை அறிந்து
என் வாசல் தேடி வந்தாய்.
தொட்டுச்செல்லும்
சாரல் மழையாய்...



உன் கைவிரல் தொட்டுக்கொள்ள,
போட்டி போட்டு
இடம் மாறிக்கொண்டன,
நீ தொட்டவிசைப்பலகையின்
எழுத்துக்கள்.....



இக்கணத்தில் நீ என்னை நினைத்துக்கொண்டிருப்பாய்
என்ற நினைவில்தான்
இந்நொடியில் துடித்துக்கொண்டிருக்கிறது
என் ' இதயம் ' .....



கீழே விழுந்த குழந்தையை தூக்கி நீ
கொஞ்சிவிட்டு சென்ற பின்பு,
உன்னைக் காணும்போதெல்லாம்
குழந்தையாய் மாறி
உன் பார்வையில்
தடுக்கி விழ நினைக்கும் மனம். . . .


-  ' அவளால் உருவான '  ஜெய் 


No comments:

Post a Comment