Sunday, March 7, 2010

புகைக்குள் புதையும் .....

அன்று அவளைக் கைப்பிடிப்பதற்காக
என்னைக் கைவிட்டாய்,
இன்று அவள் உன்னைக் கைவிட்டபின்பும்,
உன் விரல்களைத் தாங்கிப் பிடிப்பது
நான்தான்.........

நிச்சயம் ஒரு நாள்
நீ பதில் சொல்லியே ஆக வேண்டும்,
உன்னுள் இருக்கும்
ஆறாத் தீயினால்
என்னை நீ பொசுக்குவதற்கு ....

உருப்படுவதாய் எண்ணமே இல்லையா?
தினமும் நடுஇரவில் வந்து
புகைப்பிடிக்கிறாய்...
தேரடி வீதியில் கடை வைத்திருக்கும்
அண்ணாச்சி கேட்டார்.......
அவருக்கென்ன தெரியும்,

என்னைச் சந்தித்த வேளைகளில்,
அது நீ கடந்து சென்ற பாதை என்று !!!

' புகைப்பிடிக்கிறாயாமே ?? '
எல்லாரும் சந்தேகப்படுகிறார்கள்,
உடனே நிறுத்து
தினம் தினம் கடல் தாண்டி
தொடர்பு கொள்ளும்...
என் மாமனுக்கு
எப்படி சொல்வேன்.......
' புகைப்பிடிக்க கற்றுத் தா ,
பிறகு நிறுத்துகிறேன் ' என்று....!!


புகைப்பிடிக்கும் சாக்கில்
அதிகாலையில் கடைக்கு வந்தாலும்,
நீ வரும் பாதையில்
நண்பர்களுக்கு தெரியாமல்
பதுங்கியே விதைக்கிறேன்
உனக்கான கவிதைகளை,
ஒரு நாளேனும் அவற்றுக்கு உயிர்கொடுப்பாய்
என்ற கனவுகளுடன்.....

உன்னைப் பிரிந்ததும்,
நான் புகைப்பிடிக்க தொடங்கியதை
கண்டுகொள்ளாமல் இருந்தாய்.....
ஒரு நாள் தெரியும் உனக்கு,
இவன் தினம் தினம்
இறக்கவே முயற்சி செய்தான் என்று......

No comments:

Post a Comment